ஞானவாபி மசூதி 
இந்தியா

ஞானவாபி மசூதி வழக்கு: ஆய்வு நடத்த அனுமதி!

ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

DIN

ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி உள்ளது. முகலாய மன்னா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில், கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு அந்த மசூதி கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஒட்டுமொத்த ஞானவாபி மசூதி வளாகத்திலும் தொல்லியல் மற்றும் அறிவியல்பூா்வ ஆய்வு மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரி, வாரணாசி நீதிமன்றத்தில் ஹிந்து மதத்தைச் சோ்ந்த சிலா் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனு மீதான விசாரணையில் இருதரப்பு வாதங்கள் கடந்த ஜூலை 14 ஆம் தேதி நிறைவடைந்தது.

இந்நிலையில், ஞானவாபி மசூதி வளாகத்தில் அறிவியல் பூர்வமாக ஆய்வு நடத்தவும், ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்பிக்கவும் இந்திய தொல்லியல் துறைக்கு வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மசூதியில் சிவலிங்கம் இருப்பதாக கூறப்பட்ட பகுதியை 'பாதுகாக்கப்பட்ட பகுதி' என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதால், அப்பகுதியை தவிர்த்து மற்ற பகுதிகளில் ஆய்வு நடத்தலாம் என வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

SCROLL FOR NEXT