மணிப்பூர் வன்கொடுமை குறித்து பிரிஜ் பூஷண் கருத்து!
மணிப்பூர் வன்கொடுமை குறித்து இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும் மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகாருக்கு உள்ளானவருமான பிரிஜ் பூஷண் கருத்து தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் வன்கொடுமை குறித்து இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும் மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகாருக்கு உள்ளானவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் இரு பெண்களுக்கு நடந்த கொடுமை கண்டிக்கத்தக்கது என்றும், சுதந்திர இந்தியாவில் நடந்த வருந்தத்தக்க சம்பவம் எனவும் பிரிஜ் பூஷண் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் பேசியதாவது, மணிப்பூரில் நிலவரம் மிகவும் மோசமாகவுள்ளது. உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் அங்கு சென்றிருந்தார். மணிப்பூரில் நடந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. சுதந்திர இந்தியாவில் நடந்த வருந்தத்தக்க சம்பவம். இந்த சம்பவம் குறித்து பிரதமரும் கருத்து தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மணிப்பூரில் கடந்த மே 4-ஆம் தேதி, குகி பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த 2 பெண்கள், மைத்தேயி தரப்பைச் சோ்ந்த ஆண்களால் ஆடைகள் களையப்பட்டு, ஊா்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.