முகப்பு
இந்தியா

நடப்பு கூட்டத்தொடரிலிருந்து ஆம் ஆத்மி எம்.பி. இடைநீக்கம்!

மணிப்பூர் விவகாரம் குறித்து அமளியில் ஈடுபட்டதால் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

Updated On : 24 ஜூலை, 2023 at 1:06 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:12 AM

மணிப்பூர் விவகாரம் குறித்து அமளியில் ஈடுபட்டதால் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி  நடைபெற்று வரும் நிலையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் முடங்கி வருகிறது. 

இந்நிலையில் இன்று(திங்கள் கிழமை) மாநிலங்களவையில் மணிப்பூர் விவகாரம் குறித்து கேள்வி  எழுப்பிய ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் அமளியில் ஈடுபட்டார். 

Advertisement

இதையடுத்து நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஞ்சய் சிங்கை இடைநீக்கம் செய்வதாக அவைத் தலைவர் ஜகதீப் தங்கர் அறிவித்தார். 

தொடர்ந்து சஞ்சய் சிங் நீக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டு வருகின்றனர். 

முன்னதாக மக்களவையிலும் மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.