முகப்பு
இந்தியா

மோடி, மோடி; இந்தியா, இந்தியா: முழக்கங்களால் அதிர்ந்த மாநிலங்களவை!

மாநிலங்களவையில் ஆளுங்கட்சியினர் மோடி, மோடி என்றும், எதிர்க்கட்சியினர் இந்தியா, இந்தியா என்றும் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு நிலவுகிறது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:43 AM
பகிர்:

தில்லி: மாநிலங்களவையில் ஆளுங்கட்சியினர் மோடி, மோடி என்றும், எதிர்க்கட்சியினர் இந்தியா, இந்தியா என்றும் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு நிலவுகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், தொடர்ந்து 5 நாள்களாக மணிப்பூர் கலவரம் குறித்து இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், 6-வது நாளாக மக்களவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே, மாநிலங்களவையில் வெளியுறவுத் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில் ஆளும்கட்சியினர் மோடி, மோடி என்று முழக்கமிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, ‘இந்தியா’ கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சியினர் இந்தியா, இந்தியா என்று பதில் முழக்கமிட்டனர்.

அவையில் இரு தரப்பினரும் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் பகல் 12 மணிவரை அவையை ஒத்திவைப்பதாக மாநிலங்களை தலைவர் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →