இந்தியா

அயோத்தியில் சிலை பிரதிஷ்டை: பிரதமர் மோடிக்கு அழைப்பு!

DIN

அயோத்தியில் ராமர் கோயிலின் சிலை பிரதிஷ்டைக்கு பிரதமர் மோடிக்கு ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர். 

இதுகுறித்து ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறுகையில், 

ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு ஜனவரி 15 முதல் 24 வரை தேதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வுக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளது. சிலை பிரதிஷ்டை செய்யப்படும் சரியான தேதியை பிரதமரே முடிவு செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயிலின் சிலை பிரதிஷ்டைக்கு 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்க உள்ளதாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது. 

ராமர் கோயில் கட்டுமானம் பலதரப்பட்ட சட்ட சிக்கலில் சிக்கி நிலையில், கோயிலுக்கான இடத்தை உச்ச நீதிமன்றம் ஒப்படைத்த பிறகு ஆகஸ்ட் 2020ல் கட்டுமான பணிகள் தொடங்கின. அதன் பிறகு ஆகஸ்ட் 5ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

5-ம் கட்டத் தேர்தல்: காலை 9 மணி நிலவரம்!

ஆலங்குளம் அருகே லாரி ஓட்டுநர் குத்திக் கொலை

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன் கைது

SCROLL FOR NEXT