இந்தியா

பள்ளிகளில் ஸ்மார்ட்ஃபோனுக்கு தடை வேண்டும்: காரணம் சொல்லும் யுனெஸ்கோ

DIN


பள்ளி மாணவர்களுக்கு கசப்பான செய்தியை யுனெஸ்கோ தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் ஸ்மார்ட்ஃபோன் கொண்டு வர தடை விதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் யுனெஸ்கோ, ஏன் பள்ளிகளில் ஸ்மார்ட்ஃபோனுக்கு தடை விதிக்க வேண்டும் என்பதற்கான விளக்க அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறது.

அந்த விளக்க அறிக்கையில், ஸ்மார்ட்ஃபோன்கள், மாணவர்களின் கவனத்தை திசைதிருப்புகின்றன. ஒருபோதும் கல்வி பயில்வதற்கான சாதனமாக இருக்கவில்லை என்கிறது.

யுனெஸ்கோவின் சர்வதேச கல்வி கண்காணிப்பு அறிக்கை 2023ஆனது, கல்வியில் தொழில்நுட்பத்தின் பங்கை வலியுறுத்தவே செய்கிறது. அதேவேளையில், பள்ளிகளில் மாணவர்கள் ஸ்மார்ட்ஃபோன் வைத்திருப்பதை உலகம் முழுவதும் இருக்கும் அரசுகள் கட்டுப்படுத்தி, கண்காணிக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில் மற்றும் கல்விக்கான தேவையில்லாத விஷயங்களுக்காக, மாணவர்கள் பள்ளிகளில் அதிக நேரம் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துவது நிச்சயம் எதிர்மறையாகவே இருக்கும் என்று கூறுகிறது.

யுனெஸ்கோ பொது இயக்குநர் இது பற்றி கூறுகையில், நிச்சயம் தொழில்நுட்ப புரட்சியானது அளவிடமுடியாத பயன்களை உடையதுதான், ஆனால், இந்த சமூகத்தை ஒழுங்கமைக்க வேண்டியதற்கான சமிக்ஞைகளும் எழுந்துள்ளன. அது மட்டுமல்லாமல் கல்வியில் அந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்போது கூடுதல் கவனம் தேவை என்றும் குரல் ஒலிக்கிறது. இது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்மைபயக்க வேண்டுமே தவிர, தீமை விளைவிக்க விட்டுவிடக் கூடாது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?

இன்று அட்சய திருதியை: தங்கம் விலை ரூ.720 உயர்வு!

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபர் கொன்று புதைப்பு

நொய்டா: தொழிலதிபரின் மகன் கொலை வழக்கில் மூவா் கைது

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை எதிா்ப்பு

SCROLL FOR NEXT