இந்தியா

மேற்கு வங்கத்தில் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: மத்திய அமைச்சர் அனுராக் தாக்குா் 

மேற்கு வங்கத்தில் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்துள்ளார். 

DIN

மேற்கு வங்கத்தில் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாயத்து தேர்தலில் 57 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை நான் கூற விரும்புகிறேன். மம்தா பானர்ஜியின் விருப்பத்தை நிறைவேற்ற, மக்கள் கொல்லப்பட்டனர். மேற்கு வங்கத்தில் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

மம்தாவின் அறிவுறுத்தலின்பேரில்தான் அக்கட்சியின் ஆதரவாளர்கள் பஞ்சாயத்து தேர்தலின்போது வன்முறையை அரங்கேற்றினர். கடந்த 8-9 ஆண்டுகளாக மம்தா தனது அரசியல் ஆதாயத்திற்காக குண்டர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் அளித்து வருகிறார். 

கடந்த (பஞ்சாயத்து) தேர்தலை ஒப்பிடும்போது, ​​இந்த முறை பா.ஜ.க இரண்டு மடங்கு இடங்களை உயர்த்தியுள்ளது. மக்கள் போராடத் தொடங்கியுள்ளனர் என்பதையே இது காட்டுகிறது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் நாட்கள் மெல்ல மெல்ல முடிவுக்கு வருவதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முன்னாள் போட்டியாளர்கள்!

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

SCROLL FOR NEXT