இந்தியா

ஆக.4ல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடன் கார்கே ஆலோசனை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆக.4ல் ஆலோசனை நடத்த உள்ளார். 

DIN

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆக.4ல் ஆலோசனை நடத்த உள்ளார். 

2024 மக்களவைத் தேர்தல், தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் காங்கிரஸ் கட்சி ஆலோசனையை தொடங்குகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் 4ஆம் தேதி தில்லியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 

இதில் பங்கேற்க, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மாநில முன்னாள் தலைவர்கள், 8 எம்.பி.க்கள், 18 எம்எல்ஏ-க்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக 4 ஆண்டுகளுக்கு மேல் கே.எஸ்.அழகிரி தொடர்கிறார். 

எனவே கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு புதிய தலைவர் நியமிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதேபோல் ஆகஸ்ட் 2ல் கேரளம், 3ல் கர்நாடகம் காங்கிரஸ் தலைவர்களும் தில்லி சென்று ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் போக்குவரத்துக் கழக பெண் ஊழியரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

ரூ.13.5 லட்சத்தில் தொகுப்பு வீடுகள் கட்ட 5 பேருக்கு பணி ஆணை

மான் வேட்டை: இளைஞா் மீது வனத் துறையினா் வழக்குப் பதிவு

புதுவையிலிருந்து கடத்தல் மூவா் கைது: 900 மதுப்புட்டிகள் பறிமுதல்

பெண்ணைத் தாக்கி மிரட்டல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT