இந்தியா

பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தான் ட்ரோன் கண்டெடுப்பு!

இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை (ட்ரோன்) எல்லை பாதுகாப்புப் படையினா் கைப்பற்றியுள்ளனர். 

DIN

இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை (ட்ரோன்) எல்லை பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) கைப்பற்றியுள்ளனர். 

தர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள கலாஷ் கிராமம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எல்லைக்குள் பாகிஸ்தான் ஆளில்லா விமானம் பறந்து வருவதை கண்டறிந்தனா்.

இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் ஆளில்லா விமானத்தை இடைமறித்து பாகிஸ்தானின் வஞ்சகமான முயற்சியை முறியடித்துள்ளனா்.  

மேலும், ட்ரோனில் 3 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப்பொருள்களை கைப்பற்றினர். 

இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருமல் மருந்து விவகாரம்: தமிழகத்தில் மருந்து நிறுவனங்களில் ஆய்வு செய்ய உத்தரவு

திருச்சியில் மூன்று இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நாளை(அக். 14) முதல் 4 நாள்கள் சட்டப்பேரவை கூட்டம்! - அப்பாவு

ஆம்பூர் அருகே ஆற்றில் தவறி விழுந்து இளைஞர் பலி

92 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT