இந்தியா

ஜெய்ப்பூர் ரயிலில் துப்பாக்கிச்சூடு: இறந்த வீரருக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி!

DIN

ஜெய்ப்பூர்-மும்பை விரைவு ரயிலில் ஆர்.பி.எஃப் வீரர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியான ஏஎஸ்ஐ வீரர் திகாராம் குடும்பத்துக்கு ரயில்வே நிதியுதவி அறிவித்துள்ளது. 

ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்ற விரைவு ரயில் பஹல்கர் மாவட்டம் அருகே வந்துகொண்டிருந்தபோது, ரயில்வே பாதுகாப்புப் பணியிலிருந்த பாதுகாப்புப்படை(ஆர்பிஎப்) வீரர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏஎஸ்ஐ வீரர் உள்பட நான்கு பேர் பலியாகினர். 

துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில் தப்பியோடிய ஆர்பிஎப் வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில், பலியான ஏஎஸ்ஐ வீரரின் குடும்பத்துக்கு ரயில்வே நிதியுதவி அறிவித்துள்ளது. அதன்படி, ஏஎஸ்ஐ வீரரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சமும், இறுதிச்சடங்கிற்கு ரூ.20 ஆயிரம், மேலும் பொது காப்பீட்டுத் தொகையாக ரூ.65 ஆயிரமும் வழங்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

கல்கியின் நாயகி!

எழும்பூர் ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: உடனடியாக மீட்ட காவல்துறை

இந்திய குடியுரிமை பெற்ற பின் தனது முதல் வாக்கை செலுத்தினார் பிரபல நடிகர்

முத்தக் காட்சியில் கீர்த்தி சுரேஷ்?

SCROLL FOR NEXT