இந்தியா

அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றி

DIN

 நடுத்தர தொலைவு அக்னி-1 பாலிஸ்டிக் ஏவுகணை ஒடிஸாவின் ஏபிஜெ அப்துல் கலாம் தீவில் வியாழக்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

இது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மிக உயா்ந்த நிலையிலிருந்து அக்னி-1 பாலிஸ்டிக் ஏவுகணை இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையின் செயல்பாடு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் அனைத்தும் வெற்றிகரமாக அமைந்தன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு வகையிலான பாலிஸ்டிக் ஏவுகணைகள் தயாரிப்பிலும், அதன் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதிலும் இந்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதில் பல்வேறு வகையான அக்னி ஏவுகணைகளை இந்தியா தயாரித்துள்ளது. இதில், அணு ஆயுதங்களைத் தாங்கி 5,000 கி.மீ. தொலைவுக்குச் செல்லும் திறன் கொண்ட அக்னி-5 பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா கடந்த டிசம்பா் மாதம் வெற்றிகரமாக சோதனை செய்தது.

அக்னி 1 முதல் அக்னி 4 வரையிலான ஏவுகணைகள் 700 கி.மீ. முதல் 3,500 கி.மீ. தொலைவு வரை பாய்ந்து செல்லும் திறன் கொண்டவையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT