இந்தியா

மேக்கேதாட்டு அணை குறித்து தமிழக அரசிடம் முறையிடுவேன்: டி.கே. சிவக்குமார்

DIN

மேக்கேதாட்டு அணை குறித்து தமிழக அரசிடம் முறையிடுவேன் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

கர்நாடத்தில் வாழும் தமிழர்களும், தமிழகத்தில் வாழும் கன்னடர்களும் காவிரி நீரை குடித்து வருகின்றனர். மேக்கேதாட்டு  திட்டத்தின் மூலம் இரு மாநிலங்களும் பயனடையும்.

மேக்கேதாட்டு  திட்டம் தொடர்பாக தமிழக அரசிடம் முறையிடுவேன். மேக்கேதாட்டு அணையால் காவிரி படுகை விவசாயிகளுக்கு பாசன நீர், பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்கும். தமிழக மக்கள் மீது கோபமோ, வெறுப்போ எனக்கு இல்லை. அவர்களை சகோதரர்களாக பார்க்கிறேன் என்று தெரிவித்தார். 

முன்னதாக, காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவோம் என்று கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் கூறியிருப்பதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்து நிலையில், டி.கே. சிவக்குமாரின் இந்த ட்விட்டர் பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரமே... சித்திரமே...

இருவர் அரைசதம்: லக்னௌ அணிக்கு 209 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!

சுந்தரி.. கேப்ரெல்லா!

தீராக் காதல்! ஜான்வி கபூர்..

கடைசி டி20: பாகிஸ்தானுக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து!

SCROLL FOR NEXT