முகப்பு
இந்தியா

கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா அருகே தடம் புரண்டது

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த விரைவு ரயில் ஒடிசா அருகே சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:02 PM
படம்: நன்றி/ஏஎன்ஐ ட்விட்டர்
பகிர்:

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா அருகே சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.  

ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டம் அருகே கோரமண்டல் விரைவு ரயில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே இரு ரயில்கள் மோதிய விபத்தில் பலர் இறந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ரயில்கள் மோதிய விபத்தில் 7க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தடம்புரண்டு உள்ளே பயணிகள் சிக்கியுள்ளனர்.

இரவுநேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கு இடையே மீட்பு பணிகள் நடந்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.  ரயில் விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஷாலிமர்-சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில் விபத்தில் முதற்கட்டமாக 6 பேர் பலியானதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

அதேசமயம் மீட்கப்பட்டோரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 60க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அவசரகால கட்டுப்பாடு அறை எண்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.  அவசர கட்டுப்பாட்டு அறை பாலசோர்(ஒடிசா): 91 6782262286 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

முழு கட்டுரையைப் படிக்க →