நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹால் பிரசண்டா இரண்டு நாள் பயணமாக மத்தியப் பிரதேசத்திற்கு வெள்ளிக்கிழமை வந்தடைந்தார்.
நேபாளத்தில் கடந்தாண்டு டிசம்பரில் 3-வது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்ற பிரசண்டா நான்கு நாள் அரசு முறைப் பயணமாக நேற்று இந்தியா வந்தார். அவற்றின் ஒரு பகுதியாக இன்று ம.பி.க்கு வந்துள்ளார்.
பிரசண்டாவும் அவரது தூதுக்குழுவினரும் இந்தூர் விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். அங்கு அவர்களை மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் மற்றும் அவரது அமைச்சரவையின் ஊழியர்களான துளசிராம் சிலாவத், உஷா தாக்கூர் மற்றும் இந்தூர் பாஜக எம்பி சங்கர் லால்வானி ஆகியோர் வரவேற்றனர்.
நேபாள பிரதமரை வரவேற்க விமான நிலையத்தில் பாரம்பரிய நடனம் நிகழ்த்தப்பட்டது. மேலும் ஜெய் மகாகாளி என்ற கோஷங்களும் எழுப்பப்பட்டது.
பிரசண்டா உஜ்ஜைனியில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான மகாகலேஷ்வர் கோயிலைப் பார்வையிடத் திட்டமிடப்பட்டுள்ளார். பின்னர் இன்று மாலை 4 மணியளவில் மத்தியப் பிரதேச ஆளுநர் மங்குபாய் படேலுடன் சந்திப்பை நிகழ்த்த உள்ளார். மேலும், இந்தூர் நகராட்சி கழகம் நடத்தும் ஒரு திடக்கழிவு மேலாண்மை ஆலைக்கு வருகை தர உள்ளார்.
சனிக்கிழமையன்று, நேபாள பிரதமர் இந்தூரில் உள்ள டி.சி.எஸ், இன்போசிஸ் நிறுவனங்களை பார்வையிடுகின்றார். பின்னர் புது தில்லிக்கு புறப்படுகிறார்.
முன்னதாக, பிரதமர் பிரசண்டா புதன்கிழமை பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் முக்கியத்துவமாக சில ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.