இந்தியா

ஒடிசா விபத்து: 10க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் ரயில்கள் ரத்து!

ஒடிசா ரயில் விபத்தின் எதிரொலியாக 10க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

DIN

ஒடிசா ரயில் விபத்தின் எதிரொலியாக 10க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டம் அருகே கோரமண்டல் விரைவு ரயில் மற்றொரு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. 

பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நடந்த இந்த ரயில் விபத்தில், 50க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 350க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரயில்கள் மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தடம்புரண்டு உள்ளே பயணிகள் சிக்கியுள்ளனர்.  இரவுநேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கு இடையே மீட்பு பணிகள் நடந்து வருவருகிறது. 

உதவி எண்கள்:

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அவசரகால கட்டுப்பாடு அறை எண்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. 

அவசர கட்டுப்பாட்டு அறை பாலசோர் (ஒடிசா): 91 6782262286, (சென்னை) 044-25330952, 044-25330953, 25354771 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

ரயில் விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில்,  கொல்கத்தா முதல் சென்னை வரையிலான வழித்தடத்தில் 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT