ஒடிசா ரயில் விபத்து: அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
ஒடிசா கோர ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்தியாஒடிசா ரயில் விபத்து: அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
ஒடிசா கோர ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
புதுதில்லி: ஒடிசா கோர ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஜூன் 2 ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில், மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 280 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விபத்து நிகழ்ந்த இடத்தை நேரில் பார்வையிட்டு மீட்புப் பணிகளை துரிதபடுத்தி கண்காணித்து வருகிறார்.
புவனேஸ்வர் மற்றும் கொல்கத்தாவில் இருந்து மீட்புக் குழுக்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும், விமானப் படையும் குவிக்கப்பட்டுள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இந்நிலையில், ஒடிசா கோர ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
அப்போது, இந்த கோர விபத்து எப்படி நடந்தது. மீட்பு மற்றும் மீட்கப்பட்டவர்களின் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும், மீட்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, நிவாரணம் விவரங்கள் உள்ளிட்டவற்றை குறித்தும் பிரதமர் மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இரங்கல் மற்றும் நிதியுதவி: கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 280 பேர் பலியாகியுள்ளனர், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விபத்தில் பலியானோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்
விபத்து குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணாவிடம் பேசியதாகவும், நிலைமை குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.