இந்தியா

ஒடிசாவில் மம்தா பானர்ஜி: விபத்து நடந்த பகுதியைப் பார்வையிட்டார்!

ஒடிசாவில் நிகழ்ந்த கொடூர ரயில் விபத்து நடந்தப் பகுதியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சென்று பார்வையிட்டார். 

DIN

ஒடிசாவில் நிகழ்ந்த கொடூர ரயில் விபத்து நடந்தப் பகுதியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சென்று பார்வையிட்டார். 

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே ஜூன் 2ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்களும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 280-ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோகமான விபத்தைக் காண பிரதமர் நரேந்திர மோடி ஒடிசாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். முன்னதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி சம்பவ இடத்தை அடைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 

இதனிடையே, மீட்புப் பணிகளை மேற்கொள்ள சிறப்புக் குழுவை  மேற்குவங்க அரசு நேற்றிரவு ஒடிசாவுக்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில், ரயில் விபத்து  நடந்தப் பகுதியை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சென்று பார்வையிட்டார். மீட்புப் பணிகள் துரிதப்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT