இந்தியா

விபத்துப் பகுதியில் மீட்புப் பணிகள் முடிவு: ரயில்வே நிர்வாகம்

DIN


விபத்துப் பகுதியில் மீட்புப் பணிகள் முடிவடைந்துவிட்டதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உடனடியாக, விபத்து நடந்த பகுதியில் சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருப்பதகாகக் கூறப்படுகிறது.

மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளில் ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே, சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் உள்பட மூன்று ரயில்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் 238 பேர் பலியாகினர். 900 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயில் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தமிழக பயணிகளை சென்னை அழைத்து வர சென்னையிலிருந்து சிறப்பு ரயில் புவனேஸ்வரம் செல்கிறது.

ரயில் விபத்தில் உயிர் தப்பிய 250 பேர் சென்னை சிறப்பு ரயில் மூலம், தமிழகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

SCROLL FOR NEXT