முகப்பு
இந்தியா

மணிப்பூரில் பாதுகாப்புப் படை வீரர் சுட்டுக் கொலை!

மணிப்பூரில் பாதுகாப்புப் படை வீரர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. 

Updated On : 6 ஜூன், 2023 at 12:35 PM
பகிர்:

மணிப்பூரில் பாதுகாப்புப் படை வீரர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. 

மணிப்பூரின் செரூ பகுதியில் நேற்றிரவு பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர். 

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.