இந்தியா

கல்லூரி மாணவி கொலை: ரயில் முன் குதித்து குற்றவாளி தற்கொலை!

தெற்கு மும்பையில் உள்ள விடுதியில் கல்லூரி மாணவியை கொலை செய்த காவலாளி ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

மும்பை: தெற்கு மும்பையில் உள்ள விடுதியில் கல்லூரி மாணவியை கொலை செய்த காவலாளி ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் அகோலா மாவட்டத்தை சேர்ந்த 18 வயது மாணவி, பாந்தராவில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். இவர் மரைன் டிரைவ் பகுதியில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு தோழிகளுடன் பேசிவிட்டு தூங்கச் சென்ற மாணவியை அடுத்த நாள் பிற்பகல் வரை காணாததால், விடுதியின் பொறுப்பாளரும், சக மாணவிகளும் அவரது அறையை பார்த்தபோது வெளியில் பூட்டப்பட்டிருந்தது. சந்தேகத்தின் பேரில் ஜன்னல் வழியாக பார்த்தபோது மாணவி அரைகுறை ஆடையுடன் தரையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்த காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.

காவல்துறையின் விசாரணையில் திங்கள்கிழமை இரவு முதல் விடுதியில் பணிபுரிந்த காவலாளி கானோஜியா(வயது 30) என்பவர் காணவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

சிசிடிவி கேமிராக்களை பரிசோதித்த காவல்துறையினர், கானோஜியா மீது வழக்குப்பதிவு செய்து தேடத் தொடங்கினர். ஆனால், அருகிலுள்ள ரயில் தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் கானோஜியா உடலை கைப்பற்றினர்.

மேலும், காவல்துறையினர் முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில், காவலாளி மாணவியை பாலியல் கொடுமை செய்து கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிலுவை வழக்குகள் விரைந்து முடிக்க வேண்டும்: கடலூா் எஸ்.பி. அறிவுறுத்தல்

வண்ணாா்பேட்டை பல்பொருள் அங்காடி மின்தூக்கியில் சிக்கிய 5 போ் மீட்பு

நெல்லையில் ஆண் சடலம் மீட்பு

பாளை.யில் நூல் அறிமுக விழா

முன்னாள் படை வீரா்கள் நலத்துறை சாா்பில் தையல் இயந்திரம் விநியோகம்

SCROLL FOR NEXT