இந்தியா

ரயில் விபத்துக்குப் பின் சாப்பிடவே முடியவில்லை.. உயிர்பிழைத்தவர் பகிரும் காரணம்

DIN


குவகாத்தி: அசாமைச் சேர்ந்த 27 வயது இளைஞர், ரயில் விபத்துக்குப் பின் தன்னால் சாப்பிடக் கூட முடியவில்லை என்றும், விபத்தின்போது தன்னுடன் பயணித்தவரின் தலை துண்டாகி தன் நெஞ்சின் மீது வந்து விழுந்ததைப் பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை என்றும் கூறுகிறார்.

சோனிட்புர் மாவட்டத்தைச் சேர்ந்த ரூபக் தாஸ், ஒடிசா மாநிலத்தில் நேரிட்ட ரயில் விபத்தின்போது, கோரமண்டல் ரயிலில் பயணித்தவர்.

ரயில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென பயங்கர சப்தம் கேட்டது. ரயில் தடம்புரண்டுவிட்டது என்றுதான் நினைத்தேன். ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோதுதான், எங்கள் ரயிலின் எஞ்ஜின், சரக்கு ரயில் மீது ஏறி நின்றிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ரயில் எஞ்ஜினிலிருந்து துண்டிக்கப்பட்டு எங்களது ரயில் நகர்ந்துகொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தோம். 

அவசரகாலத்தில் வெளியேறும் கதவு வழியாக நான் வெளியே குதித்தேன். எனக்குப் பின்னால் இரண்டு பேரும் குதித்தார்கள். அந்த நொடிக்குள், அதே வழித்தடத்தில் வந்த பெங்களூரு - ஹௌரா விரைவு ரயில் எங்கள் ரயில் மீது மோதியது. அதில், நான் வந்த ரயில் பெட்டிகள் நொறுங்கிப் போயின. அப்போது, ஒரு நபரின் துண்டிக்கப்பட்ட தலைப்பகுதி ஜன்னல் வழியாக ஒரு கால்பந்தைப் போல உருண்டு வந்து என் நெஞ்சின் மீது விழுந்தது. அதைப் பார்த்த அந்த நொடி நான் அப்படியே உறைந்துபோனேன். 

அதுமுதல் என்னால் சாப்பிடக் கூட முடியவில்லை. காயங்களுக்காக சிகிச்சை பெற்று வருகிறேன். ஆனால், மனதில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து என்னால் வெளியேற முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

SCROLL FOR NEXT