இந்தியா

பாகிஸ்தானின் மூத்த வழக்குரைஞர் அப்துல் ரஸாக் சுட்டுக் கொலை!

DIN

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தேசத்துரோக வழக்கைத் தாக்கல் செய்ய மூத்த பாகிஸ்தான் வழக்குரைஞர் அப்துல் ரஸாக் ஷார் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டாவின் விமான நிலைய சாலையில், நீதிமன்றத்திற்குச் சென்றுகொண்டிருந்த போது உச்சநீதிமன்ற வழக்குரைஞர் அப்துல் ரஸாக் ஆயுதமேந்தி வந்த மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வழக்குரைஞர் உடனடியாக குவெட்டா சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் பலத்த காயமடைந்த அவர் பாதி வழியிலேயே உயிரிழந்தார். 

குவெட்டா சிவில் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் ஆயிஷா ரியாஸ் கூறுகையில், 

அப்துல் ரஸாக் ஷார் கொடிய தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். அவர் மீது 16 குண்டுகள் பாய்ந்துள்ளதால், மருத்துவமனைக்கு கொண்டுவரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத ஆறு பேர் ஷார் மீது தாக்குதல் நடத்தினர். அவரது மார்பு, கழுத்து, வயிற்றுப் பகுதியில் 16 குண்டுகள் அவர் மீது பாய்ந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி குல் முஹம்மது தெரிவித்தார். 

குவெட்டா பார் அசோசியேஷன் தலைவர் அபிட் கக்கர் பலூசிஸ்தான் உயர்நீதிமன்றம் மற்றும் கீழ் நீதிமன்றங்களின் முழுமையான புறக்கணிப்பை அறிவித்தார். மேலும் ஷேரின் மரணம் தொடர்பாக மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அவர் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ: இந்தாண்டும் மாணவிகளே அதிக தேர்ச்சி!

பாலிவுட் ராணி..!

11 மணி வாக்குப்பதிவு நிலவரம்: மே.வங்கம் முதலிடம்!

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு: சென்னையில் 98.47% தேர்ச்சி!

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT