இந்தியா

ஜேஎன்யு பல்கலை.யில் 2 மாணவர்களை கடத்த முயற்சி; வெளிவாகனங்களுக்கு அனுமதியில்லை

தில்லியிலுள்ள ஜேஎன்யு பல்கலைக் கழகத்தில் நுழைந்து 2 மாணவர்களை மர்ம நபர்கள் கடத்த முயன்றதைத் தொடர்ந்து வளாகத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

DIN

தில்லியிலுள்ள ஜேஎன்யு பல்கலைக் கழகத்தில் நுழைந்து 2 மாணவர்களை மர்ம நபர்கள் கடத்த முயன்றதைத் தொடர்ந்து வளாகத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழக வளாகத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வெளியிலிருந்து வரும் வாகனங்கள் உள்ளே வர அனுமதியில்லை என நிர்வாகம் அறிவித்துள்ளது. 

தில்லியிலுள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் புதன்கிழமை இரவு 2 மாணவர்களை கடத்த வெளியிலிருந்து காரில் வந்த நபர்கள் முயன்றுள்ளனர்.

அவர்கள் குடித்துவிட்டு வளாகத்தில் வாகனத்தை இயக்கி வந்ததும் தெரியவந்துள்ளது. 

இதன் விளைவாக பல்கலைக் கழகத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. வெளியிலிருந்து வரும் வாகனங்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வளாகத்தில் தங்கியுள்ளவர்கள் தங்கள் அடையாள அட்டையை காண்பித்து உள்ளே வரலாம் எனவும் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வள்ளலாா் நினைவு தினம்: பிப்.1-இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

162 பயனாளிகளுக்கு ரூ.1.65 கோடி நலத்திட்ட உதவி: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

தலைமைச் செயலகத்துக்கு நடைப்பயணம்: 87 தொழிலாளா்கள் கைது

சோழா் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு

போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

SCROLL FOR NEXT