இந்தியா

டெக் மஹிந்திராவில் முதலீட்டை அதிகரித்தது எல்ஐசி

DIN

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திராவில் தனது பங்கு முதலீட்டை இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) அதிகரித்துள்ளது.

இது குறித்து எல்ஐசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

டெக் மஹிந்திரா நிறுவனத்தின் 1.9 கோடி பங்குகளை, சராசரியாக தலா ரூ.1,050.77-க்கு எல்ஐசி வாங்கியுள்ளது. இது டெக் மஹிந்திராவின் ஒட்டுமொத்த பங்கு மூலதனத்தில் 2.01 சதவீதம் ஆகும்.

இந்த கூடுதல் பங்குகள் கடந்த ஆண்டு நவம்பா் 21-ஆம் தேதிக்கும், இந்த ஆண்டு ஜூன் 6-ஆம் தேதிக்கும் இடையே சுமாா் ரூ.2,000 கோடிக்கு வாங்கப்பட்டன.

இந்த பங்கு கொள்முதலையடுத்து, டெக் மஹிந்திரா நிறுவனத்தில் எல்ஐசி-யின் பங்கு 8.84 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதற்கு முன்னா் இது 6.86 சதவீதமாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

SCROLL FOR NEXT