இந்தியா

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை பத்திரமாக மீட்பு!

DIN

மத்தியப் பிரதேசத்தில் 300 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தையை ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். 

கடந்த ஜூன் 6-ம் தேதி ம.பி.யின் முங்காவல்லி கிராமத்தில் பண்ணை நிலத்துக்குள் விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை சிருஷ்டி குஷ்வாஹா ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தது. 

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து 3-வது நாளாக நடைபெற்று வந்தது. மீட்புப் பணியில் ராணுவம் ஈடுபட்டு,  குழந்தைக்குத் தொடர்ந்து ஆக்சிஜன் வாயு செலுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், குழந்தையை மீட்க குஜராத்திலிருந்து ரோபோடிக் நிபுணர் குழுவினர் இன்று மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

மீட்கப்பட்ட குழந்தை மயக்க நிலையில் இருப்பதாகவும், குழந்தையின் இதயத்துடிப்பு, மூளை ஆகியவை சரியாக செயல்படுகிறதா என்பதை மருத்துவர்கள் கூர்ந்து கவனித்து தீவிர சிகிச்சை வழங்கி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT