இந்தியா

அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் பாஜகவில் இணைந்தார்!

அதிமுகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன், கட்சியிலிருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார்.

DIN

அதிமுகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன், கட்சியிலிருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார்.

ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்து வந்த மைத்ரேயன், கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணையப் போவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.  இந்த நிலையில், புது தில்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் முன்னிலையில், மைத்ரேயன் இன்று பாஜகவில் இணைந்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

1991ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த மைத்ரேயன், 1999ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

2002ஆம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 3 முறை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர், அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டபோது ஓபிஎஸ்-ஐ சந்தித்ததற்காக 2022ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக இபிஎஸ் அறிவித்தார். 

இதனால், ஓபிஎஸ் ஆதரவாளராகவே நீடித்த மைத்ரேயன், அதிமுகவிலிருந்து விலகி தற்போது மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதிப்போட்டி: பந்துவீச்சில் அசத்திய இந்தியா; 146 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!

ஒய்யாரம்... ஷிவானி!

தில்லியில் இன்று ஒரே நாளில் 300 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியீடு!

பெங்களூரில் வீடுகளின் விற்பனை 21% அதிகரிக்கும்: ப்ராப் ஈக்விட்டி

SCROLL FOR NEXT