இந்தியா

மோசமான வானிலை: பாகிஸ்தான் வான்பகுதிக்குள் நுழைந்த இண்டிகோ விமானம்

DIN

இஸ்லாமாபாத்: மோசமான வானிலை காரணமாக இண்டிகோ நிறுவனத்தின் பயணிகள் விமானம் பாகிஸ்தானின் வான்பகுதிக்குள் சனிக்கிழமை நுழைந்தது.

பஞ்சாப் மாநிலம் அமிருதரஸில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், வானிலை காரணமாக அட்டாரி வழியாக பாகிஸ்தான் வான்பகுதிக்குள் சனிக்கிழமை நுழைந்தது மோசமானது இந்திய வான்பகுதிக்கு திரும்பியதாக இண்டிகோ நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து அமிருதரஸ் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளரால் பாகிஸ்தானுக்கு தகவல் அளிக்கப்பட்டதாகவும், பின்னர் விமான அகமதாபாத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை இரவு 7:30 மணிக்கு வடக்கு லாகூரின் வான்பகுதிக்குள் நுழைந்த விமானம் இரவு 8:01 மணிக்கு இந்திய வான்பகுதிக்கு திரும்பியது.

மோசமான வானிலையின்போது வான் எல்லையைத் தாண்டுவது சாவதேச அளவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒன்று என்பதால், இது அசாதாரண நிகழ்வல்ல என்று பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணைய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் 4 ஆம் தேதி பாகிஸ்தானில் பலத்த மழை பெய்தபோது ஓமன் தலைநகா் மஸ்கட்டில் இருந்து திரும்பிய பாகிஸ்தான் பிகே 248 விமானம், இந்தி வான்பகுதிக்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT