முகப்பு
இந்தியா

அதிக கட்டணம் வசூலித்த ஆட்டோ ஓட்டுநரைத் தட்டிக் கேட்டவருக்கு நேர்ந்த கதி!

அதிக கட்டணம் வசூலித்த ஆட்டோ ஓட்டுநரை கேள்வி கேட்ட அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 12 ஜூன், 2023 at 4:27 PM
பகிர்:


அதிக கட்டணம் வசூலித்த ஆட்டோ ஓட்டுநரை கேள்வி கேட்ட அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் பெங்களூருவில் தனது வீட்டிற்குச் செல்வதற்காக ஆட்டோவில் பயணித்துள்ளனர். இறங்கும்போது ஆட்டோ ஓட்டுநர் இருமடங்கு கட்டணம் கேட்டுள்ளார். 

இதைத் தட்டிக் கேட்ட சகோதரர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. இது கைகலப்பாக மாறியுள்ளது. இதனிடையே ஆட்டோ ஓட்டுநர் வைத்திருந்த ஆயுதத்தால் இருவரையும் தாக்கியுள்ளார். 

Advertisement

இதில், அஹ்மத் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது சகோதரர் அயூப் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சையில் உள்ளார். 

இதனிடையே சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் ஆட்டோ ஓட்டுநரை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.