இந்தியா

பிபர்ஜாய் புயல்: குஜராத்தில் சுமார் 7,500 பேர் முகாம்களுக்கு மாற்றம்!

குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள ஜக்காவ் துறைமுகத்திற்கு அருகே பிபர்ஜாய் புயல் கரையைக் கடக்கக் உள்ள நிலையில், அங்குள்ளோர் தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

DIN

குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள ஜக்காவ் துறைமுகத்திற்கு அருகே பிபர்ஜாய் புயல் கரையைக் கடக்கக் உள்ள நிலையில், அங்குள்ளோர் தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய அதிதீவிர புயல் பிப்பர்ஜாய் வடக்கு திசையில் நகர்ந்து இன்று(ஜூன் 12) காலை 8.30 மணியளவில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பேர்பந்தரில் (குஜராத்) இருந்து தென்-தென்மேற்கே சுமார் 360 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. 

இது மேலும் ஜூலை 14-ல் காலை வரை வடக்கு திசையிலும், அதன் பிறகு, வடக்கு-வடகிழக்கு திசையிலும் நகர்ந்து சௌராஷ்டிரா-கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில் 15.06.23 அன்று நண்பகல் மிக தீவிர புயலாக மாண்டிவி(குஜராத்) மற்றும் கராச்சி(பாகிஸ்தான்) இடையே ஜக்காவு துறைமுகம்(குஜராத்) அருகே கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 125 - 135 கி.மீ வேகத்திலும் இடையிடையே 150 கி.மீ வேகத்திலும் இருக்கக்கூடும். 

அதி தீவிர புயல் குஜராத், ஜக்காவ் துறைமுகத்திற்கு அருகில் நிலச்சரிவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் கரையோரம் உள்ள சுமார் 7,500 பேர் தற்காலிகமாக முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயில் சதுா்த்தி விழா ஆக.18-இல் தொடக்கம்!

தேவகோட்டை முருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

பழனி கோயிலுக்கு மின்கல வாகனம் நன்கொடை

புதுக்கோட்டை: கி.பி 18-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஊரணிக் கல்வெட்டு கண்டெடுப்பு

கந்தா்வகோட்டை சிவாலயத்தில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT