முகப்பு
இந்தியா

செங்கோட்டையில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் வெட்டிக் கொலை!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.      

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:07 PM
வெட்டிக் கொல்லப்பட்ட தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் ராஜேஷ்
பகிர்:

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.             

செங்கோட்டை அருகே விஸ்வநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் ராஜேஷ்(23).    இவர் செங்கோட்டை நகராட்சியில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். புதன்கிழமை காலையில் பணிக்காக தன்னுடைய இருசக்கர வாகனத்தில் நகராட்சி அலுவலகத்திற்குள் வந்தார். அப்போது அவரை இரண்டு நபர்களால் அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே ராஜேஷ் உயிரிழந்தார். 

இது குறித்து தகவல் இருந்த ராஜேஷின் உறவினர்கள் செங்கோட்டை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் தலைமையிலான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.