முகப்பு
இந்தியா

கொல்கத்தா விமான நிலையத்தில் தீ விபத்து!

கொல்கத்தா விமான நிலையத்தில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு நிலவியது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:47 AM
பகிர்:

கொல்கத்தா: கொல்கத்தா விமான நிலையத்தில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு நிலவியது.

தீ விபத்து காரணமாக கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்கள், நிலைமை கட்டுக்குள் வந்த பிறகு சிறிது தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

இதுகுறித்து கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் வெளியிட்ட செய்தி:

புதன்கிழமை இரவு 9.12 மணியளவில் விமான நிலையத்தில் சோதனைப் பகுதியில் சிறிய தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். புகையின் காரணமாக சிறிது நேரம் சேவை பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து இரவு 9.40 மணியளவில் தீ அணைக்கப்பட்ட பிறகு சோதனைப் பகுதியில் சேவை மீண்டும் தொடங்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீ விபத்துக்கான காரணம் மின்கசிவாக இருக்கலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →