தில்லியில் பயிற்சி மையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தலைநகர் தில்லியில் முகர்ஜி நகரில் உள்ள கட்டடத்தில் 3-வது மாடியில் உள்ள தனியார் போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
உடனடியாக உள்ளே இருந்த மாணவ, மாணவிகள் மூன்றாவது மாடியில் இருந்து சன்னல் வழியாக கேபிள் வயர் மூலமாக கீழே இறங்கினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உயிரிழப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
இதையும் படிக்க | அமரீந்தர் சிங்குடன் ஜெ.பி.நட்டா சந்திப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.