இந்தியா

பிபர்ஜாய் புயல்: அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் குஜராத் முதல்வர் ஆய்வு

DIN

பிபர்ஜாய் புயல் தொடர்பாக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

கிழக்கு மத்திய அரபிக் கடலில் கடந்த 6-ஆம் தேதி உருவான பிபர்ஜாய் புயல், ஜகாவ் துறைமுகம் அருகே இன்று(வியாழக்கிழமை) மாலை 4 மணி முதல் 5 மணிக்குள் பிபர்ஜாய் கரையை கடக்கும் என்றும் அப்போது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

புயலையொட்டி மத்திய, மாநில அரசுகள் சார்பில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. 

கடலோர மாவட்டங்களைச் சோ்ந்த 50,000 போ் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா். புயலின் தாக்கத்தால், செளராஷ்டிரா-கட்ச் பகுதியில் புதன்கிழமை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கடலில் அதிகம் சீற்றம் காணப்படுகிறது. 

இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில அரசு சார்பில் காந்தி நகரில் அவசரகால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

இன்று காலை அங்கு சென்ற குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT