இந்தியா

ரூ.50 கோடி பணம் கேட்டு எம்பியின் மனைவி, மகன் கடத்தல்: மீட்டது எப்படி?

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் எம்பியின் குடும்பத்தினரைக் கடத்தி ரூ.50 கோடி பணம் கேட்டு மிரட்டிய நிலையில், காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு 48  மணி நேரத்தில் அவர்களை மீட்டனர். 

DIN

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் எம்பியின் குடும்பத்தினரைக் கடத்தி ரூ.50 கோடி பணம் கேட்டு மிரட்டிய நிலையில், காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு 48  மணி நேரத்தில் அவர்களை மீட்டனர். 

விசாகப்பட்டினத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் எம்பியாக இருப்பவர் எம்விவி சத்தியநாராயணா. இவரிடன் நண்பரும், ஆடிட்டருமான வெங்கடேஸ்வர ராவ் இருவரும் ஒன்றாக இணைந்து ரியஸ் எஸ்டேட் பணியில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில், ஜூன் 15-ம் தேதி காலை 8 மணியளவில் விசாகப்பட்டினம், ருசிகொண்டாவில் உள்ள எம்பியின் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்த மர்ம நபர்கள் அவரது மனைவி ஜோதி, மகன் சரத் மற்றும் ஆடிட்டர் வெங்கடேஸ்வர  ராவ் ஆகியோரை கடத்திச் சென்றனர். 

கடத்திச் சென்றவர்கள் தொலைபேசியில் ரூ.50 கோடி பணம் கேட்டு எம்பியை மிரட்டியுள்ளனர். இதையடுத்து, பதறிப்போன நிலையில் எம்பி காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

இதையடுத்து அழைப்பு வந்த தொலைபேசி எண்ணின் சிக்னலை வைத்து மர்ம கும்பல் இருக்கும் இடத்தை போலீஸார் கண்டறிந்தனர். காவல்துறை பின்தொடர்வதை அறிந்த மர்ம கும்பல், காரில் கடத்திச் சென்ற மூவரையும், நெடுஞ்சாலையின் பாதி வழியிலேயே இறக்கிவிட்டுத் தப்பிச் சென்றனர். 

இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில், சமீபத்தில் கொலை வழக்கில் ஈடுபட்ட பிரபல ரௌடி ஹேமந்த் குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாய்ப்புகள் தேடிவரும் விருச்சிக ராசிக்கு: தினப்பலன்கள்!

மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்

மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமிடும் தவெக!

விமானத்தில் தகராறு: கீழே இறக்கிவிடப்பட்ட அதிமுக நிா்வாகி

SCROLL FOR NEXT