கோப்புப்படம் 
இந்தியா

ம.பி.யின் மொரீனாவில் பேருந்தும் லாரியும் மோதி விபத்து: 3 பேர் பலி, 7 பேர் காயம்

மத்தியப் பிரதேச மாநிலம் மொரீனாவில் உள்ள தேவ் பூரி பாபா பகுதியில் சனிக்கிழமை டிப்பர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதிக் கொண்டதில் 3 பேர் பலியாகினர், மேலும் 7 பேர் காயமடைந்தனர். 

DIN

மொரீனா: மத்தியப் பிரதேச மாநிலம் மொரீனாவில் உள்ள தேவ் பூரி பாபா பகுதியில் சனிக்கிழமை டிப்பர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதிக் கொண்டதில் 3 பேர் பலியாகினர், மேலும் 7 பேர் காயமடைந்தனர். 

இதுகுறித்து பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் ஷைலேந்திர சிங் சௌகான், "குவாலியரில் இருந்து தில்லி செல்லும் வழியில் சனிக்கிழமை ஒரு டிப்பர் லாரியும், பயணிகள் பேருந்து மோதிக்கொண்டன. இதில், 3 பேர் பலியாகினர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக, மே 31 ஆம் தேதி, மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் கார் மரத்தில் மோதியதில் கார் தீப்பிடித்து எரிந்ததில் ஒரு பெண் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி! கைபர் முதல்வரை நீக்கியது இம்ரான் கானின் கட்சி!

உங்கள் தொண்டு எங்களுக்கு தேவையில்லை! மத்திய அரசுக்கு கேரள நீதிமன்றம் கடும் தாக்கு!

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்!

பல்கலை. பேராசிரியர்கள் மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு!

காஸா போரை கண்டித்து பேரவையில் தீர்மானம்!

SCROLL FOR NEXT