ஒடிசா ரயில் விபத்து 
இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: பொறியாளர் தலைமறைவு குறித்து ரயில்வே விளக்கம்

ஒடிசா ரயில் விபத்து தொடர்பான சிபிஐயின் விசாரணைக்கு ஆஜராகாமல் சிக்னல் பொறியாளர் தலைமறைவாகியுள்ளதாக வெளியான செய்தி குறித்து தென்கிழக்கு ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

DIN

பாலசோர்: ஒடிசா ரயில் விபத்து தொடர்பான சிபிஐயின் விசாரணைக்கு ஆஜராகாமல் சிக்னல் பொறியாளர் தலைமறைவாகியுள்ளதாக வெளியான செய்தி குறித்து தென்கிழக்கு ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் மோதிக் கொண்டதில் 290-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த கோர விபத்து தொடர்பான விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.

விபத்து நடந்தபோது பணியில் இருந்த சிலரை சிபிஐ தங்களின் வளையத்துக்குள் கொண்டுவந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சிபிஐயின் விசாரணை வளையத்தில் இருந்த சிக்னல் பிரிவு இளநிலை பொறியாளர் அமீர் கான், பாலசோரில் அவர் குடியிருந்த வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகின.

இந்த செய்தி ஊடகங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், ரயில் விபத்து தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஊழியர் தலைமறைவு என ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மையில்லை என்றும், சிபிஐ விசாரணைக்கு அனைத்து ஊழியர்களும், அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் தென்கிழக்கு ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை விபத்தில் லேப் டெக்னீசியன் உயிரிழப்பு

மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் கைது

அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 போ் உயிரிழப்பு

இன்றைய மின்தடை: காவேரிப்பட்டணம்

சட்ட விரோதமாக அமிலம் பதுக்கல்

SCROLL FOR NEXT