முகப்பு
இந்தியா

ஆய்வக வைர தொழில்நுட்பத்தில் இந்தியா முனைப்பு

அமெரிக்க அரசுமுறைப் பயணத்தின்போது, அதிபா் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட வைரத்தைப் பிரதமா் நரேந்திர மோடி நினைவுப் பரிசாக அளித்தது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
பகிர்:

அமெரிக்க அரசுமுறைப் பயணத்தின்போது, அதிபா் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட வைரத்தைப் பிரதமா் நரேந்திர மோடி நினைவுப் பரிசாக அளித்தது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அந்த வைரங்கள் இருவகை தொழில்நுட்பங்கள் மூலமாக உருவாக்கப்படுகின்றன. அதிக அழுத்தம் மற்றும் அதிக வெப்பம் (ஹெச்பிஹெச்டி), வேதி நீராவி படிவு (சிவிடி) என்ற தொழில்நுட்பங்கள் ஆய்வக வைரங்களை உருவாக்கப் பயன்படுகின்றன. சிவிடி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆய்வக வைரத்தை உருவாக்கும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகித்து வருகிறது.

கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் ஆய்வக வைரங்களின் வா்த்தகத்தில் சா்வதேச அரங்கில் இந்தியாவின் பங்களிப்பு 25.8 சதவீதமாக இருந்தது. எனினும், ஆய்வக வைரங்களை உருவாக்குவதற்கான மூலப் பொருள்களுக்கு இந்தியா மற்ற நாடுகளைச் சாா்ந்திருக்கும் சூழலே நிலவுகிறது.

ஆய்வக வைர நகைகளின் சந்தை மதிப்பு 2025-க்குள் 500 கோடி டாலரையும், 2035-க்குள் 1,500 கோடி டாலரையும் எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஆய்வக வைரங்களுக்கான மூலப்பொருள்கள் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்தது. ஆய்வக வைரங்கள் மீதான ஆராய்ச்சி நடவடிக்கைகளை அதிகரிக்கும் நோக்கில் சென்னை ஐஐடி-க்கு நிதியுதவியையும் மத்திய அரசு வழங்கியுள்ளது.

ஆய்வக வைரங்களுக்கான மையத்தை சென்னை ஐஐடி-யில் அமைப்பதற்காக 5 ஆண்டுகளில் ரூ.242.96 கோடியை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

உலக வைரத் தொழில் சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு 25 சதவீதத்துக்கும் அதிகமாகும். எனினும் வைரத் தொழிலில் பயன்படுத்தும் பல தொழில்நுட்பங்களுக்கு வெளிநாடுகளையே நம்ப வேண்டியுள்ளது. இந்நிலையில், உள்நாட்டில் தொழில்நுட்பங்களை உருவாக்க இந்தியா முனைப்பு காட்டி வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →