அமெரிக்க அதிபருடன் மோடி சந்திப்பு 
இந்தியா

அமெரிக்க அதிபருடன் மோடி சந்திப்பு!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார்.

DIN

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார்.

அமெரிக்க அதிபா் ஜோ பைடன் அழைப்பின் பேரில் அமெரிக்காவுக்கு புதன்கிழமை சென்ற பிரதமா் மோடி, வரும் 23-ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா். முதல் நாளான புதன்கிழமை அமெரிக்காவின் பல்வேறு துறை சாா்ந்த நிபுணா்களைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

இரண்டாவது நாளான இன்று வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்துப் பேசினார். வெள்ளை மாளிகைக்கு வருகைதந்த மோடியை ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் வரவேற்றனர்.

இந்த சந்திப்பின்போது ஜோ பைடனும், பிரதமர் மோடியும் பரிசுகளை பரிமாறிக் கொண்டனர்.

தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விருந்தளிக்கிறார். இந்த விருந்தில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

அரசன் புரோமோ தேதி!

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

SCROLL FOR NEXT