இந்தியா

முதல் திரிபுரா முதல்வரின் மனைவிக்கு அரசு பங்களா ஒதுக்கீடு!

DIN

திரிபுரா மாநிலத்தின் முதன்முதலாக தேர்வுசெய்யப்பட்ட முதல்வரின் மனைவிக்கு அம்மாநில அரசு பங்களா ஒதுக்கீடு செய்துள்ளது. 

இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சச்சிந்திர லால் சிங் முதன்முதலாக திரிபுரா மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தவர். 

இவர் ஜூலை 1, 1963 முதல், 1973 நவம்பர் 1 வரை வடகிழக்கு மாநிலத்தில் முதல்வராக பதவி வகித்தார். கடந்த 2000-த்தில் சிங் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். 

இந்நிலையில், 91 வயதான சிங்கின் மனைவி சமீபத்தில் முதல்வர் மாணிக் சாஹாவிடம் குடியிருப்பு ஒதுக்கீடு செய்யக்கோரி வேண்டுகோள் விடுத்திருந்தார். 

சுதந்திர போராளியும், முன்னாள் முதல்வருமான சச்சிந்திர லால் சிங்கின் பங்களிப்பு குறித்து புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், சிங்கின் மனைவியின் வேண்டுகோளுக்கிணங்க அகர்தலாவில் பங்களா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, சிங்கின் மனைவி இறக்கும் வரை அந்த பங்களாவை பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன்!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

SCROLL FOR NEXT