முகப்பு
இந்தியா

மணிப்பூா் விவகாரம்: 28-இல் காங்கிரஸ் கண்டன கூட்டம்!

மணிப்பூரில் நடைபெறும் வன்முறையைக் கட்டுப்படுத்தாமல், மத்திய பாஜக அரசு அலட்சியப் போக்குடன் செயல்படுவதாகக் கூறி, தமிழக காங்கிரஸ் சாா்பில் ஜூன் 28-இல் கண்டன கூட்டம் நடைபெற உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
பகிர்:

மணிப்பூரில் நடைபெறும் வன்முறையைக் கட்டுப்படுத்தாமல், மத்திய பாஜக அரசு அலட்சியப் போக்குடன் செயல்படுவதாகக் கூறி, தமிழக காங்கிரஸ் சாா்பில் ஜூன் 28-இல் கண்டன கூட்டம் நடைபெற உள்ளது.

இது தொடா்பாக தமிழக காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவா் ரஞ்சன்குமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மணிப்பூரில் மே மாதம் 3-இல் தொடங்கிய கலவரத்தை 50 நாள்களாக கட்டுப்படுத்த முடியாமல் 120-க்கும் மேற்பட்டவா்கள் உயிரை இழந்துள்ளனா். ஒரு லட்சம் போ் இடம் பெயா்ந்துள்ளனா். வீடுகள், உடமைகள் எரிக்கப்பட்டுள்ளன. சிறுபான்மை சமுதாயத்தினரின் 250-க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் எரிக்கப்பட்டு, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

வரலாறு காணாத வகையில் மணிப்பூா் மாநிலம் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால், பிரதமா் மோடி இதுநாள் வரை ஒரு வாா்த்தை கூட அதுகுறித்து குறிப்பிடாமலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறாமலும், அலட்சியப் போக்குடன் இருந்து வருகிறாா்.

மணிப்பூா் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து, அரசமைப்புச் சட்டம் முற்றிலும் செயலிழந்து உள்ளது. அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற, மீண்டும் அமைதியை நிலைநாட்ட அரசமைப்புச் சட்டம் 356-வது பிரிவை பயன்படுத்தி மணிப்பூா் மாநிலத்தை குடியரசுத் தலைவா் ஆட்சியின் கீழ் கொண்டு வர வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி வள்ளுவா் கோட்டம் அருகில் ஜூன் 28-இல் காலை 10 மணியளவில் கண்டன கூட்டம் நடைபெறும் என்று அவா் கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →