முகப்பு
இந்தியா

விலையைக் குறைக்க அரிசி, கோதுமை ஏலம்: மத்திய அரசு முடிவு

வெளிச்சந்தையில் சில்லறை விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்திய உணவுக் கழகத்தின் மூலம் முதல்கட்டமாக 4 லட்சம் டன் கோதுமை மற்றும் 5 லட்சம் டன் அரிசியை ஏலத்தில் விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
பகிர்:

வெளிச்சந்தையில் சில்லறை விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்திய உணவுக் கழகத்தின் மூலம் முதல்கட்டமாக 4 லட்சம் டன் கோதுமை மற்றும் 5 லட்சம் டன் அரிசியை ஏலத்தில் விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் பேசிய இந்திய உணவுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் அசோக் கே.மீனா கூறுகையில், ‘அண்மைக்காலமாக, அரிசி மற்றும் கோதுமையின் சில்லறை விலையில் பணவீக்கப் போக்கு காண்கிறோம். சந்தையில் இந்த உணவுத் தானியங்களை விற்பனை செய்து சில்லறை விலையைக் குறைக்கும் திறந்த சந்தை விற்பனை திட்டத்தை நடைமுறைபடுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, 4 லட்சம் டன் கோதுமைக்கான முதல்கட்ட ஏலம் வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் வெள்ளிக்கிழமையிலிருந்து பெறப்பட்டு வருகிறது. 5 லட்சம் டன் அரிசிக்கான ஏலம் வரும் 5-ஆம் தேதி நடைபெறகிறது. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் பெறப்படும்.

ஏலத்தில் பங்கேற்பவா்கள் அதிகபட்சமாக 100 டன் வரை உணவுத் தானியங்களை வாங்கி கொள்ளலாம். சிறுவா்த்தகா்களைக் கருத்தில்கொண்டு குறைந்தபட்சமாக 10 டன் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு குவிண்டால் கோதுமைக்கான இருப்பு விலை ரூ.2,150 எனவும், ஒரு குவிண்டால் அரிசிக்கான இருப்பு விலை ரூ.3,100 எனவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சூழல் தேவைப்பட்டால், திறந்த வெளிச் சந்தை விற்பனை திட்டம் மூலம் வெளியிடுவதற்கு 87 லட்சம் டன் கோதுமையும், 292 லட்சம் டன் அரிசியும் அரசிடம் கூடுதல் இருப்பு உள்ளது.

உணவுச் சட்டங்களின்படி நாட்டின் 80 கோடி மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்களை அரசு வழங்கி வருகிறது. மீதமுள்ள 60 கோடி மக்களும் நியாயமான விலையில் உணவுத் தானியங்கள் பெறுவதை திறந்த சந்தை விற்பனை திட்டம் உறுதிபடுத்தும்’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →