ஜம்மு-காஷ்மீருக்கு இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று வருகை தந்துள்ளார்.
அமித் ஷாவை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, மாநில அமைச்சர்கள், துணை ராணுவ அதிகாரிகள் மற்றும் பாஜகவின் மூத்த தலைவர்கள் ஜம்மு விமான நிலையத்தில் வரவேற்றனர்.
பின்னர், அவர் பாரதீய ஜன சங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
ஜம்முவின் பகவதி நகர் பகுதியில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றி அவர் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
இதன்பின், ஜம்முவில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.