முகப்பு
இந்தியா

சத்தீஸ்கரில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை: அடுத்த 48 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

சத்தீஸ்கரில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து மாநிலத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

Updated On : 23 ஜூன், 2023 at 9:16 PM
பகிர்:

சத்தீஸ்கரில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து மாநிலத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: தென்மேற்கு பருவமழை சத்தீஸ்கரின் தெற்கு பகுதியில் தொடங்கியுள்ளது. மாநிலத்தில் ஜூன் 13 ஆம் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை 10 நாட்கள் தாமதமாக தொடங்கியுள்ளது. அடுத்த 2-3 நாட்களில் சத்தீஸ்கர் மாநிலம் முழுவதிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிடும். அடுத்த 48 மணி நேரத்தில் சத்தீஸ்கரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.