மத்தியப் பிரதேசம் மாநிலம் தமோவில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றுக்கு சரிந்து விழுந்த திருமண பந்தல். 
இந்தியா

மத்தியப்பிரதேசத்தில் கனமழை: திருமண பந்தல் சரிந்து விழுந்ததில் 8 பேர் காயம்

மத்தியப் பிரதேசம் மாநிலம் தமோவில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றுக்கு திருமண பந்தல் ஒன்று சரிந்து விழுந்தது.

DIN


தமோ​ (மத்தியப் பிரதேசம்): மத்தியப் பிரதேசம் மாநிலம் தமோவில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றுக்கு திருமண பந்தல் ஒன்று சரிந்து விழுந்ததில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தவர்களில் 8 பேர் காயமடைந்தனர். 

இது குறித்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மத்தியப் பிரதேசம் மாநிலம் தமோவில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றுக்கு திருமண பந்தல் ஒன்று சரிந்து விழுந்தது. இதில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவதற்காக வந்திருந்தவர்களில் 8 பேர் காயமடைந்தனர். 

அவர்களில் ஒருவர் பலத்த காயம் அடைந்ததாகவும், காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஜபல்பூருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக  தெரிவித்தனர்.

பலத்த காயமடைந்த ஒருவர் மட்டும் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்றவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

SCROLL FOR NEXT