இந்தியா

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: பிரதமர் மோடி ஆலோசனை!

DIN

பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

400 நாள்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படாத நிலையில் விலை குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடா்ந்து நிலையாக இருக்கும் பட்சத்தில், பெட்ரோல்-டீசல் விலையைக் குறைப்பது குறித்து எண்ணெய் நிறுவனங்களுடன் ஆலோசிக்க வாய்ப்புள்ளது என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்து இருந்தார்.

கடந்த ஏப்ரல் 22-க்கு பிறகு பெட்ரோல்-டீசல் விலை உயா்த்தப்படாமல் உள்ளது. 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் நான்கு மாநில தேர்தல் வரவுள்ளதால் விலை குறைக்க வாய்ப்புள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை கால பயிா்களில் வெப்ப தாக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள்

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

SCROLL FOR NEXT