இந்தியா

சிபிஐ சிறப்பு இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரி அஜய் பட்நாகர் நியமனம்

மூத்த ஐபிஎஸ் அதிகாரி அஜய் பட்நாகர் மத்திய புலனாய்வுத் துறையின் சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக பணியாளர் அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

DIN

புதுதில்லி: மூத்த ஐபிஎஸ் அதிகாரி அஜய் பட்நாகர் மத்திய புலனாய்வுத் துறையின் சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக பணியாளர் அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜார்கண்ட் கேடரை சேர்ந்த 1989 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அஜய் பட்நாகர், தற்போது சிபிஐ கூடுதல் இயக்குனராக உள்ளார். அவரை சிபிஐ சிறப்பு இயக்குநராக நியமனம் செய்து மத்தியப் பணியாளர் அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இவர் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி வரை அவர் பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் குஜராத் கேடரின் 1994 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான மனோஜ் சஷிதர், சிபிஐயின் கூடுதல் இயக்குநராக மூன்று ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்கா வாஷிங்டன் காவல்துறை: கைப்பற்றிய டிரம்ப் அரசு

வரி ஆண்டு: மக்களவையில் மசோதாக்கள் நிறைவேற்றம்

பிகார் வாக்காளா் பட்டியல் விவகாரம்: மாநிலங்களவையில் அமளி

சென்னை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு

ரூ. 7,900 கோடி கூடுதலாக கடன் பெற மத்திய அரசிடம் கேரளம் கோரிக்கை

SCROLL FOR NEXT