கோப்புப்படம் 
இந்தியா

கொல்கத்தா: சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 30 பேர் காயம்

மேற்கு வங்க மாநிலம் புர்பா பர்தமான் மாவட்டத்தில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் விழுந்ததில் 30 பேர் காயம் அடைத்துள்ளனர்.

DIN

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் புர்பா பர்தமான் மாவட்டத்தில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் விழுந்ததில் 30 பேர் காயம் அடைத்துள்ளனர்.

இந்த விபத்தை குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்," கிருஷ்ணாநகரில் இருந்து அசன்சோலுக்கு புதன் கிழமை இரவு சென்றுகொண்டிருந்த பேருந்து, புர்பா பர்தமான் மாவட்டம் தேவந்திகி என்ற இடத்தில் செல்லும்போது விபத்து ஏற்பட்டது. 

பேருந்து ஓட்டுநர் பேருந்தை  அதிவேகமாக ஓட்டியுள்ளார். அதேநேரத்தில் இருசக்கர வாகனத்தின் மீது இடிக்காமல் இருப்பதற்காக திருப்பியபோது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் பர்த்வான் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைத்தவர்களில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. 

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

ரசிகர்களின் அன்பை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்! -நடிகர் அஜித்குமார்

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT