ஜமா மசூதி 
இந்தியா

பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.

DIN

தில்லி: நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.

இஸ்லாமியர்களின் மிக முக்கிய திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் இஸ்லாமியர்கள் இன்று காலை சிறப்புத் தொழுகை செய்தனர்.

தில்லியில் பழமை வாய்ந்த ஜமா மசூதியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட பின்னர், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

பக்ரீத்தை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தில்லி, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT