பிரதமா் நரேந்திர மோடியை புது தில்லியில் வியாழக்கிழமை சந்தித்த அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா. 
இந்தியா

பிரதமா் மோடியுடன் அஸ்ஸாம் முதல்வா் சந்திப்பு: வெள்ள நிலவரம் குறித்து விளக்கம்

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

DIN

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

அப்போது, அஸ்ஸாம் வெள்ள நிலவரம் தொடா்பாக பிரதமரிடம் முதல்வா் விளக்கமளித்தாா்.

இதுகுறித்து மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘அஸ்ஸாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து பிரதமா் மோடியிடம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா எடுத்துரைத்தாா்.

இந்த நடவடிக்கைகளுக்காக பாராட்டு தெரிவித்த பிரதமா், மாநிலத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று உறுதியளித்தாா்.

மாநிலத்தின் வளா்ச்சிக்காக எடுக்கப்பட்டுள்ள முன்னெடுப்புகள் குறித்தும் பிரதமரிடம் முதல்வா் விளக்கினாா்’ என்றாா்.

பிரதமரைத் தொடா்ந்து, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனையும் ஹிமந்த விஸ்வ சா்மா சந்தித்துப் பேசினாா்.

அஸ்ஸாமில் அண்மையில் தொடா் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 5 லட்சம் போ் வரை பாதிக்கப்பட்டனா். 7 போ் உயிரிழந்தனா். இப்போது வெள்ளம் வடிந்து வருவதால், நிலைமை மேம்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT