இந்தியா

கடந்த மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த மாத ஜிஎஸ்டி வசூல் குறைவு!

DIN

கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.1.49 லட்சம் கோடிக்கும் அதிகமாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 

2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மொத்தம் ரூ.1,49,577 கோடி சரக்கு மற்றும் சேவை வரி சேகரிக்கப்பட்டுள்ளது.

இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரியாக (சிஜிஎஸ்டி) ரூ.27,662 கோடி, மாநில சரக்கு மற்றும் சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ.34,915 கோடி, ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) ரூ.75,069 கோடி (இறக்குமதி பொருள்கள் மீது விதிக்கப்பட்ட ரூ.35,689 கோடி உள்பட), செஸ் ரூ.11,931 கோடியும் (இறக்குமதி பொருள்கள் மீது விதிக்கப்பட்ட ரூ.792 கோடி உள்பட) வசூலிக்கப்பட்டன.

கடந்த நிதியாண்டு (2021-22) பிப்ரவரி மாதம் ரூ. 1,33,026 கோடி வசூல் ஆகியுள்ளது. நடப்பு ஆண்டு இதைவிடக் கூடுதலாக 12% வசூல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 2023 இல் வழக்கமான தீர்வுகளுக்குப் பிறகு மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய்  சிஜிஎஸ்டிக்கு ரூ 62,432 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ 63,969 கோடியும் ஆகும்.

மேலும், 2022 ஜூன் மாதத்திற்கான மீதி ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.16,982 கோடியும், முந்தைய காலகட்டத்திற்கான ஏஜி சான்றளிக்கப்பட்ட புள்ளிவிவரங்களை அனுப்பிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.16,524 கோடியும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

சமையல் கலைஞரானார் ஏ.ஆர்.ரஹ்மான் மகள்!

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

SCROLL FOR NEXT